Sunday, August 9, 2009
பெங்களூர் திருவள்ளுவர் சிலை-கருணாநிதி திறந்து வைத்தார்

பெங்களூர்: பெங்களூர் திருவள்ளுவர் சிலையை முதல்வர் கருணாநிதி இன்று திறந்து வைத்தார்.
சிலை திறப்புக்கு சில கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து பந்துக்கு அழைப்பு விடுத்ததால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க நகர் முழுவதும் மிக பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், பந்துக்கு எந்த ஆதரவும் கிடைக்காததால் நகரில் முழு அமைதி நிலவியது.
பெங்களூர் அல்சூர் ஏரிக் கரையில் உள்ள பூங்காப் பகுதியில், தமிழ்ச் சங்கம் சார்பில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. 2001ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி அப்போதைய முதல்வர் பங்காரப்பா சிலையைத் திறந்து வைக்க தீர்மானிக்கப்பட்டு விழாவுக்கு ஏற்பாடும் செய்யப்பட்டது.
ஆனால், விழாவுக்கு ஒரு நாள் முன்னதாக புலிகேசி கன்னட சங்கம் என்ற அமைப்பு கர்நாடக உயர்நீதிமன்றத்தில், இடைக்காலத் தடை வாங்கி விட்டது. அதன் பின்னர் சிலையைத் திறக்க வாய்ப்பே இல்லாமல் போய் விட்டது.
சிலையை சாக்குத் துணியால் மூடிவைத்து விட்டனர். இந் நிலையில் தற்போதைய கர்நாடக முதல்வர் எதியூரப்பா மற்றும் தமிழக முதல்வர் கருணாநிதியின் முயற்சியால், திருவள்ளுவர் சிலைக்கு விடிவு காலம் பிறந்தது.
இந் நிலையில் திருவள்ளுவரின் சிலையை முதல்வர் கருணாநிதி இன்று திறந்து வைத்தார். இதற்கான விழா காலை 11 மணிக்குத் அல்சூர் ஏரிக்கரையில் இருக்கும் ஆர்.பி.ஏ.என்.எம். பள்ளித் திடலில் தொடங்கியது. இந் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பெங்களூர் தமிழர்கள் பங்கேற்றனர்.
விழா மேடையில் இருந்தபடி ரிமோட் கண்ட்ரோல் மூலம் சிலையை கருணாநிதி திறந்து வைத்தார்.
விழாவுக்கு கர்நாடக முதல்வர் எதியூரப்பா தலைமை தாங்கினார்.
கர்நாடக சட்டசபை எதிர்கட்சித் தலைவர் சித்தராமையா, சிவாஜி நகர் எம்.எல்.ஏ. ரோஷன் பெய்க், பெங்களூர் மத்திய தொகுதி பாஜக எம்.பி. மோகன், பாஜக தலைவர் வெங்கையா நாயுடு, பெங்களூர் தெற்கு பாஜக எம்பி அனந்த்குமார், மத்திய அமைச்சர்கள் ராசா, ஜெயகத்ரட்சகன், தமிழக சபாநாயகர் ஆவுடையப்பன், தமிழக அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி, வீரபாண்டி ஆறுமுகம், பரிதி இளம்வழுதி, ஏ.வ.வேலு, தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முதல்வர் கருணாநிதியுடன் அவரது மனைவி தயாளு அம்மாளும் விழாவில் பங்கேற்றார். அவருக்கு விநாயகர் சிலையை முதல்வர் எதியூரப்பா பரிசளித்தார்.
சில கன்னட அமைப்புகள் விடுத்த பந்த் அழைப்புக்கு எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. இதனால் பெங்களூரில் இயல்பு நிலை எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை.
அதே நேரத்தில் நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
45 உதவி போலீஸ் கமிஷனர்கள், 200 இன்ஸ்பெக்டர்கள், 500 சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையி்ல் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு இருக்கும் பூங்காவை சுற்றியும், விழா நடைபெறும் விளையாட்டு மைதானத்திலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்த விழாவையொட்டி எம்.ஜி.ரோடு, அல்சூர், சிவாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. விழாவில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான வாகனங்களில் தமிழர்கள், திமுகவினர் குவிந்தனர்.
இவர்களது வாகனங்களை நிறுத்த ஆங்காங்கே இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. எம்.ஜி.ரோட்டைத் தாண்டிச் செல்ல முடியாத அளவுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதற்கிடையே சிலை திறப்பை எதிர்த்து நகரின் சில இடங்களில் கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் மல்லேஸ்வரம், மூடுல்பாளையா உள்ளிட்ட சில பகுதிகளில் சாலை மறியல் போராட்டம் நடத்தி கைதாகினர். மத்திகரே பகுதியில் சிலர் கைகளை பிளேடால் அறுத்து ரத்தத்தை எடுத்து சிலை திறப்புக்கு எதிராக பேப்பரில் எழுதி போராட்டம் நடத்தினர்.
முன்னதாக நிகழ்ச்சி நடக்கும் இடத்தையும் ஏற்பாடுகளையும் கர்நாடக முதல்வர் எதியூரப்பா நேற்றிரவு நேரில் வந்து பார்வையிட்டார்.
சிலை திறப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று பந்த் நடத்த அழைப்பு விடுத்த கன்னட ரக்ஷண வேதிகே தலைவர் நாராயண கெளடா, கன்னட சளுவளி தலைவர் வாட்டாள் நாகராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சாலை மறியல், தற்கொலை முயற்சி...
இதற்கிடையே, திருவள்ளுவர் சிலை திறப்பை கண்டித்து கன்னட வேதிக ரக்ஷனே அமைப்பை சேர்ந்த 33 வயதான தொண்டர் ஒருவர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அவரை அருகிலிருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அதே போல் மைசூரில் இந்த அமைப்பின் உறுப்பினர் ஒருவர் அரசு கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
ஹசன், தும்கூர், சிக்மாங்களூர், மங்களூர், மைசூர், மட்டூர் மற்றும் பாகல்கோட் ஆகிய பகுதிகளில் சில கன்னட அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மைசூர், பாகல்கோட்டில் கர்நாடக முதல்வர் எதியூரப்பாவின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.
ஆயிரம் பேர் கைது...
இதையடுத்து போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை கன்னட வேதிக ரக்ஷனே தலைவர் நாராயண கெளடா, கன்னட சளுவலி தலைவர் வட்டாள் நாகராஜ் உள்ளிட்ட ஆயிரத்துக்கு மேற்பட்டவரை கைது செய்தனர்.
Wednesday, March 25, 2009
ஏப்ரல் 1ல் இணையத்தை வைரஸ் தாக்கும் அபாயம்
இணைய கணினிகளை வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி கான்ஃபிக்கர் சி (Conficker C) என்ற வைரஸ் தாக்கும் அபாயம் உள்ளதாக கணினி பாதுகாப்பு நிபுணர் கூறியுள்ளார். கான்ஃபிக்கர் சி வைரஸ் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள மோசமாக கணினி மென்பொருள் என்ற கூறியுள்ள நிபுணர், இது கணினியில் தானாகவே இன்ஸ்டால் செய்து கொண்டு மறைந்து கொள்ளும் தன்மை கொண்டது என்று கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் கூறிய கணினி பாதுகாப்பு நிபுணர் கிரஹாம் குலூலே, கான்ஃபிக்கர் சி வைரஸானது ஏப்ரல் 1 ஆம் தேதி கணினியை பாதிக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். இதனால் ஏதாவது நிகழ்ந்துவிடக்கூடும் என்று கூறிவதற்கில்லை என்றாலும், இந்த வைரஸ் கண்டிப்பாக ஏதாவது பாதிப்பை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது என்றும், இணையத்தில் மறைந்திருந்து குறிப்பிட்ட தேதியில் தாக்கும்படி உள்ளது என்றும் கூறியுள்ளார்.
கற்பை ஏலம் விட்ட பெண்!
கலி காலம் என்பது மிகச் சரியாகத்தான் இருக்கிறது என்பார்கள் இதைப் படிப்போர். மேட்டர் நமக்கு ரொம்ப ஹாட் ஆக தெரிந்தாலும், மேற்கத்திய நாடுகளுக்கு இது சர்வ சாதாரணமான சமாச்சாராம்தான்.கடைகளை ஏலம் விடுவார்கள், வீட்டை ஏலம் விடுவார்கள், ஏன் காந்தி போட்டிருந்த செருப்பைக் கூட சமீபத்தில் ஏலம் விட்டனர். ஆனால் கற்பை ஏலம் விடுவார்களா.. விட்டிருக்கிறார் ருமேனியாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர்.அந்த கலிகால கன்னியின் பெயர் அலினா பெர்சியா. 18 வயதாகும் இவர், ருமேனியாவின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஓல்டேனியாவில் உள்ள கரகல் என்ற நகரைச் சேர்ந்தவர். பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.தனது படிப்புச் செலவுக்காக இன்டர்நெட் மூலம் தனது கற்பை ஏலம் விட்டிருக்கிறார் இந்த இளம் பெண். எவ்வளவுக்குத் தெரியுமா.. 50 ஆயிரம் பவுண்ட் ஸ்டெர்லிங்குக்கு.இணையதளத்தில் தன்னைப் பற்றிய சிறு குறிப்பை வரைந்து, என்னை ஏலத்தில் எடுப்போருடன் ஒரு வார இறுதியை முழுமையாக செலவிட தயாராக இருக்கிறாராம் அலினா. தங்கும் செலவு, சுற்றிப் பார்க்க ஆகும் செலவு உள்ளிட்ட இத்யாதி செலவுகள் தனியாம் (அந்த ஊரில் வாட் வரி உண்டான்னு தெரியல..)ஜெர்மனி மொழியில் அலினா வெளியிட்டுள்ள ஏல விளம்பரம் இப்படிப் போகிறது ..நான் ஓல்ட் கவுன்டியைச் சேர்ந்த கரகல் நகரைச் சேர்ந்தவள். 18 வயதாகிறது. எடை 108 எல்பிஎஸ். 5.67 அடி உயரம், பிரவுன் கண்கள். ருமேனியாவைச் சேர்ந்த அழகுப் பெண்.தம் அடிக்க மாட்டேன். நல்ல மகப்பேறு மருத்துவர் ஒருவரிடம், நான் கன்னிப் பெண்தான் என்பதற்கான சான்றிதழ் வாங்கி வைத்துள்ளேன்.எனது முதல் உறவும், இரவும் இனிமையானதாக, சிக்கல் இல்லாத, சிறப்பான உறவாக அமைய வேண்டும் என ஆசைப்படுகிறேன்.எனக்கு மரியாதை கொடுக்கக் கூடிய, தாராள மனப்பான்மை உடைய, ஜென்டில்மேனை சந்திக்க விரும்புகிறேன். பின்னாளில் அவர் எனது கணவராகக் கூடிய தகுதியுடன் இருந்தால் சந்தோஷம்.எந்தவித கட்டுப்பாடும் இல்லாத செக்ஸுக்கு நான் தயார். ஆனால் எனது கற்பை ஏலத்தில் எடுப்பவர், நோயற்றவராக, ஆரோக்கியமானவராக இருக்க வேண்டும்.அப்படி தகுதி உடையவர் கிடைத்தால் ஒரு வார இறுதியை அவருடன் முழுமையாக செலவிட நான் தயார். ஆனால் ஹோட்டல் செலவு, பயணச் செலவு உள்ளிட்டவற்றை அவர்தான் கவனித்துக் கொள்ள வேண்டும் ..இப்படிப் போகிறது அலினாவின் விளம்பரம். 50 ஆயிரம் பவுண்ட் ஸ்டெர்லிங்குக்கு ஏலம் கூறியிருந்தாலும், இதுவரை 5000 ஸ்டெர்லிங் அளவுக்குத்தான் ஏலம் கேட்டுள்ளனராம். இந்த ஏலம் முடிய இன்னும் 3 நாட்கள் மீதமிருக்கிறதாம்.என்னத்தச் சொல்ல...
Tuesday, March 24, 2009
நானோ: ஏப் 9முதல் வெறும் ரூ.2999 செலுத்தி முன்பதிவு செய்யலாம்!
மும்பை: இந்தியாவின் கனவுக் காரான நானோவை இன்று நாட்டுக்கு அறிமுகம் செய்து வைத்தார் டாடா நிறுவனத் தலைவர் ரத்தன் டாடா.இன்று நானோ அறிமுகப்படுத்தப்பட்டாலும் வரும் ஏப்ரல் 9-ம் தேதியிலிருந்துதான் முன்பதிவு செய்யப்படும் என ரத்தன் டாடா அறிவித்துள்ளார். தொடர்ந்து 15 நாட்கள் இந்த முன்பதிவு நடக்கும்.
மூன்று மாடல்களில் வெளிவரவிருக்கும் நானோவின் ஆரம்ப விலை ரூ.1 லட்சமாகவும், வரிகள், காப்பீடு என எல்லாம் சேர்த்து ரூ.1.2 முதல் 1.3 லட்சமாகவும் இந்தக் கார் விலை இருக்கும் என்றார்.
முதல் 1 லட்சம் கார்கள் இதே விலையில் விற்கப்படும் என்றும், காரின் விலை உயர்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 850 நகரங்களில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிகளின் கிளைகள் உள்பட 30000 மையங்களில் நானோ முன்பதிவு விண்ணப்பங்கள் கிடைக்கும் என்றும், வெறும் ரூ.2999 செலுத்தி இந்தக் காரை முன்பதிவு செய்யலாம் என்றும் ரத்தன் டாடா கூறியுள்ளார்.
முன்பதிவு செய்யப்படும் கார்கள் வரும் ஜூலை 1-ம்தேதி முதல் டெலிவரி செய்யப்படும். விண்ணப்பதாரர்களில் முதல் 1 லட்சம் பேருக்கு குலுக்கள் முறையில் இந்தக் கார்
கார்கள் ஒதுக்கப்படாத விண்ணப்பதாரர்களின் பணத்துக்கு 8.5 சதவிகித வட்டி கணக்கிடப்பட்டு, கார்
மேலும் இந்தக் கார்
உலகிலேயே மிகவும் குறைந்த விலை கொண்ட பிராண்டட் கார் டாடாவின் நானோதான்.
ஒரு மோட்டார் சைக்கிளின் விலையை விட (புல்லட் விலை ரூ.1லட்சத்துக்கும் மேல்) குறைந்த விலையில் விற்பனைக்கு வந்துள்ள இந்தக் காரை முன்பதிவு கூட்டம் பெருமளவு அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த மாதம் முதல்வாரம் மட்டுமே இந்தக் கார்கள் அனைத்து டாடா மோட்டார்ஸ் ஷோரூம்களிலும் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன.
எப்படியிருந்தாலும், இன்று நானோ முன்பதிவு துவங்கும்போது, பங்குச் சந்தை சூடுபிடிக்கும் என நம்புகிறார்கள்
ஈழத் தமிழர்களை காப்போருக்கே ஓட்டு-ரஜினி ரசிகர்கள்
அரக்கோணம்: இலங்கை தமிழர்களை பாதுகாக்க உறுதிமொழி அளிக்கும் கட்சிக்கே வாக்களிக்கப் போவதாக ரஜினி ரசிகர் மன்றம் முடிவு செய்துள்ளது.அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் இடம் பெற்றுள்ள வாலாஜா, காவேரிப்பாக்கம், ராணிப்பேட்டை பகுதி ரஜினி ரசிகர் மன்றத்தினர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
அப்போது, இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர பாதுகாப்பு அளிக்கவும் அங்கு அமைதி ஏற்படவும் நடவடிக்கை எடுக்க உறுதியளிக்கும் தேசிய கட்சிக்கும் அதோடு கூட்டணி அமைக்கும் மாநில கட்சிக்கும் ஆதரவு அளிப்பது என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ரஜினி மன்றத்தினரின் முடிவைத் தொடர்ந்து திமுகவினரும், காங்கிரஸாரும் அவர்களை சமாதானப்படுத்தி ஓட்டுக்களைப் பெறும் முயற்சிகளில் இறங்கியுள்ளனராம்.
இந்தத் தேர்தலில் ரஜினி எந்தப் பக்கமும் சாயாமல நடுநிலை வகிக்கும் நிலையில் ரசிகர்கள் கோதாவில் குதித்துவிட்டனர்
Saturday, March 21, 2009
அருந்ததீ
ஆவியை அழிக்கும் மறு ஜென்ம பெண் கதை...கந்தர்வகோட்டை ராஜ குடும்பத்து பெண் அருந்ததி. சிறு வயதிலேயே வாள் சண்டை நடன கலையில் தேறுகிறாள். அவள் அக்காவை மணக்கும் பசுபதி சமஸ்தான சொத்தை அபகரிக்க முயல்கிறான். பெண்களை கடத்தி கற்பையும் சூறையாடுகிறான். அவன் கொடுமை தாங்காமல் அக்கா தூக்கில் தொங்கி இறக்கிறாள்.
ஆவேசமாகும் அருந்ததி பொது மக்கள் கையாலேயே அடித்து பசுபதியை சாகடிக்க உத்தரவிடுகிறாள். செத்து விட்டதாக அவனை காட்டுக்குள் போடுகின்றனர். அகோரர்கள் அவனை காப்பாற்றி விடுகின்றனர். அவர்களிடம் கடும் பயிற்சி எடுத்து அமானுஷ்யசக்தி கொண்டவனாக மாறுகிறான் பசுபதி.
வெறியோடு கந்தர்வ கோட்டை சமஸ்தானத்தில் நுழைந்து கண்ணில் பட்டவர்களையெல்லாம் அழிக்கிறான். அருந்ததியை கெடுக்க முயல்கிறான். எதிரிகளை வீழ்த்தும் நடன கலையால் அவனுடன் மோதி வீழ்த்துகிறாள். உயிரோடு அவனை சமாதியாக்குகிறாள். ஆனாலும் அவன் தீய சக்தி ஊரெங்கும் நோயை பரப்புகிறது. மறு பிறவி எடுத்து வந்து பசுபதியை அருந்ததி அழிப்பது கிளைமாக்ஸ்.
தெலுங்கில் இருந்து தமிழில் வந்திருக்கும் படம். பாழடைந்த பங்களா அதற்குள் பதுங்கும் ஆவி என ஆரம்பமே திகிலுட்டுகிறது. அருந்ததியை வரும் அனுஷ்கா சந்திரமுகியை நினைவூட்டுகிறார். மறுபிறவி எடுத்த அவரை பங்களாவுக்குள் சமாதியான ஆவி பழிவாங்க கந்தர்வகோட்டைக்கு வர வைப்பது திக் திக்...
மனோரமா சொல்லும் கந்தர்வகோட்டை பிளாஸ் பேக் கதை பரபர... நடனமாடி பசுபதியை அனுஷ்கா வெட்டி சாய்ப்பது... அவனை அழிக்க வரம் வேண்டி முனிவர்களை தேடி அலைவது... மறு பிறவி மூலம்தான் விழ்த்த முடியும் என அறிந்ததும் தலையில் தேங்காய்களை அடிக்க வைத்து மண்டை உடைந்து சாவது.. விறுவிறு சீன்கள்....
சமாதியில் இருந்து வெளி வரும் ஆவி செய்யும் அட்டகாசங்கள் திகிலுட்டுகிறது. ஆவியை அனுஷ்கா அழிக்கும் கிளைமாக்ஸ் மிரள வைக்கிறது.
ஆவி பசுபதியாக வரும் சோனு சூட் மிரட்டுகிறார். பேய் விரட்டும் முஸ்லிம் பெரியவராக வரும் சாயாஜி ஷிண்டே அழுத்தம்.
வரலாற்று கால கதையை இக்கால கட்டத்துடன் இணைத்து அனல் பறக்க படமாக்கிய இயக்குனர் தோடி ராமகிருஷ்ணா திறமை பளிச்சிடுகிறது. கோட்டியின் பின்னணி இசை, கே. செந்தில்குமார் ஒளிப்பதிவு பலம் சேர்கின்றன.
காந்தியடிகளின் சுயசரிதையைப் படிக்கும் கஸாப்

மகாத்மா காந்தியடிகளின் சுயசரிதையைப் படித்து வருகிறாராம் மும்பை தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டு சிறையி்ல் இருக்கும் தீவிரவாதி முகம்மது அஜ்மல் அமீர் கஸாப்.மும்பை ஆர்தர் சாலை சிறையில் பலத்த பாதுகாப்புடன் அடைக்கப்பட்டுள்ளார் கஸாப்.மகாத்மா காந்தியடிகளின் சுயசரிதையான எனது சத்திய சோதனை நூலின் உருதுப் பிரதியை வாங்கி சிறையில் படித்து வருகிறாராம் கஸாப்.இதுகுறித்து மும்பை சர்வோதய மண்டல் காந்தி புத்தக மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சோமையா இதுகுறித்துக் கூறுகையில், தங்களை சீர்திருத்திக் கொள்ளவும், திருந்துவதற்காவும் காந்தியடிகளின் நூல்களை கைதிகளுக்கு வழங்குவது வழக்கம்.இந்த நிலையில் காந்தியடிகளின் சத்தியசோதனை நூலின் உருதுப் பிரதி வேண்டும் என கஸாப் கேட்பதாக சிறை அதிகாரிகள் எங்களிடம் கூறினர். இதனால் உருது நூலை கஸாபுக்கு வழங்கினோம்.காந்தியடிகளின் சுயசரிதை கஸாப்பின் மனதை மாற்றும், தான் செய்த செயலுக்காக அவன் வருந்துவான் என நாங்கள் நம்புகிறோம் என்றார் சோமையா.
ரூ.91 கோடி வரி செலுத்திய ஐபிஎல்!
டெல்லி: ஐபிஎல்
எனப்படும் இந்தியன் பிரியமியர் லீக் கிரிக்கெட்
ஐபிஎல்
வீரர்கள், அம்பையர்கள், வர்ணனையாளர்கள் மற்றும் கோச்சுகளுக்கு தரப்பட்ட சம்பளத்தில் வரியாகப் பிடிக்கப்பட்டதே இந்தத் தொகை.
ஆரம்பத்தில் இந்த அளவு வரியை செலுத்தவில்லை ஐபிஎல்
. இதனால், இந்திய கிரிக்கெட்
கட்டுப்பாட்டு வாரியத்துக்கு வருமான வரித்துறை அலுவலகம் ஒரு நோட்டீஸ் அனுப்பியது. இதில், வீரர்கள் மற்றும் இதர பொறுப்பில் உள்ளவர்களுக்கு முழுமையாகவும் ஒரே மாதிரியாகவும் வரி பிடித்தம் செய்வதில்லை என புகார்
கூறியிருந்தது.
முதல் 6 மாதத்தில் பிசிசிஐ செலுத்திய ரூ.670 கோடிக்கு வரியாக ரூ.65 கோடி செலுத்தப்பட்டது. தற்போது ரூ.91 கோடியை ஐபிஎல்
வரியாகச் செலுத்தியுள்ளது. மேலும் விளையாட்டுடன் தொடர்புடைய உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் அல்லது கோச்சுகள் யாராக இருந்தாலும் அவர்கள் இனி தொழில்முறை ஊழியர்களாகவே பார்க்கப்படுவார்கள் என்றும், அவர்களுக்கு எந்த வித வரிச்சலுகையும் கிடையாது என்றும் வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
இதனால் 10 சதவிகிதம் வரை வரி பிடித்தம் செய்யத் துவங்கியது பிசிசிஐ. அப்படி வசூலிக்கப்பட்ட தொகைதான் இந்த 91 கோடி ரூபாய்.
இதில் ஐபிஎல் மட்டும் கூடுதலாக சேவை வரியும் செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது. மற்ற விளையாட்டுக்களைப் போல அல்லாமல், முழுக்க முழுக்க வணிக நோக்கத்துடன் நடத்தப்படுவதால் ஐபிஎல்
வேறு எந்த விளையாட்டுக்களுக்கு சேவை வரி விதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமைப்பிடமிருந்து ரூ.91 கோடியை வரியாகப் பெற்றுள்ளது இந்திய அரசு. சேவைவரி செலுத்தியாக வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல்
ஆரம்பத்தில் இந்த அளவு வரியை செலுத்தவில்லை ஐபிஎல்
முதல் 6 மாதத்தில் பிசிசிஐ செலுத்திய ரூ.670 கோடிக்கு வரியாக ரூ.65 கோடி செலுத்தப்பட்டது. தற்போது ரூ.91 கோடியை ஐபிஎல்
இதனால் 10 சதவிகிதம் வரை வரி பிடித்தம் செய்யத் துவங்கியது பிசிசிஐ. அப்படி வசூலிக்கப்பட்ட தொகைதான் இந்த 91 கோடி ரூபாய்.
இதில் ஐபிஎல் மட்டும் கூடுதலாக சேவை வரியும் செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது. மற்ற விளையாட்டுக்களைப் போல அல்லாமல், முழுக்க முழுக்க வணிக நோக்கத்துடன் நடத்தப்படுவதால் ஐபிஎல்
வேறு எந்த விளையாட்டுக்களுக்கு சேவை வரி விதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமைப்பிடமிருந்து ரூ.91 கோடியை வரியாகப் பெற்றுள்ளது இந்திய அரசு. சேவைவரி செலுத்தியாக வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹாமில்டன் முதல் டெஸ்ட் - இந்தியா அபார வெற்றி

ஹாமில்டன்: ஹாமில்டன் டெஸ்டில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் ஹாமில்டனில் நடந்தது. நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் 279 ரன்கள் எடுத்து சுருண்டது.
பின்னர் இந்தியா தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. அபாரமாக ஆடிய இந்தியா, முதல் இன்னிங்ஸிலில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 520 ரன்களைக் குவித்து ஓய்ந்தது.
ஷேவாக் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் கம்பீர் 72 ரன்களும், டிராவிட் 66 ரன்களும் சேர்த்து இந்தியாவின் நிலையை வலுப்படுத்தினர்.
ஆனால் சச்சின் டெண்டுல்கர் மிகச் சிறப்பாக ஆடி 160 ரன்களைக் குவித்ததால் இந்தியா வலுவான நிலையை எட்டியது. கேப்டன் டோணி 47 ரன்கள் சேர்த்து ஆட்டமிழ்நதார்.
கடைசி வரிசையில் இறங்கிய ஜாகிர்கான் அபாரமாக ஆடி 51 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் இந்தியா 520 ரன்களுக்கு முதல் இன்னிங்க்ஸை இழந்தது.
இந்தியா 241 ரன்களுடன் முன்னிலை பெற்றது. இதையடுத்து ஆடத் தொடங்கியது நியூசிலாந்து. ஆனால் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்களை இழந்து வெறும் 75 ரன்களுடன் பரிதாபமாக இருந்தது நியூசிலாந்து.
இந்த நிலையில் இன்று காலை மீண்டும் ஆட்டம் தொடங்கியதும், அடுத்தடுத்து தனது விக்கெட்களை இழந்தது நியூசிலாந்து.
நேற்று ஆட்டமிழக்காமல் இருந்த பிளைன், இன்று காலை 67 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.
மெக்கல்லம் மட்டுமே சற்று போராடிப் பார்த்தார் 135 பந்துகளைச் சந்தித்த அவர் 84 ரன்கள் சேர்த்தார். அதேபோல ஜெ.டி. ரெய்டர் 21 ரன்கள் சேர்த்தார். ஆனால் மற்ற வீரர்கள் குறிப்பிடத்தக்க அளவில் விளையாடவில்லை. இதனால் 279 ரன்களுக்கு ஆட்டமிழந்தது நியூசிலாந்து.
இதையடுத்து 39 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு இந்தியாவுக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து களம் இறங்கிய கம்பீரும், டிராவிடும் ஆட்டமிழக்காமல், 5.2 ஓவர்களில் இந்த இலக்கை எட்டி இந்தியாவுக்கு பெரிய வெற்றியைத் தேடித் தந்தனர்.
கம்பீர் 30 ரன்களும், டிராவிட் 8 ரன்களும் சேர்த்தனர்.
ஆட்ட நாயகனாக சச்சின் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த 10 விக்கெட் வெற்றியின் மூலம் இந்தியா டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது
இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் ஹாமில்டனில் நடந்தது. நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் 279 ரன்கள் எடுத்து சுருண்டது.
பின்னர் இந்தியா தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. அபாரமாக ஆடிய இந்தியா, முதல் இன்னிங்ஸிலில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 520 ரன்களைக் குவித்து ஓய்ந்தது.
ஷேவாக் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் கம்பீர் 72 ரன்களும், டிராவிட் 66 ரன்களும் சேர்த்து இந்தியாவின் நிலையை வலுப்படுத்தினர்.
ஆனால் சச்சின் டெண்டுல்கர் மிகச் சிறப்பாக ஆடி 160 ரன்களைக் குவித்ததால் இந்தியா வலுவான நிலையை எட்டியது. கேப்டன் டோணி 47 ரன்கள் சேர்த்து ஆட்டமிழ்நதார்.
கடைசி வரிசையில் இறங்கிய ஜாகிர்கான் அபாரமாக ஆடி 51 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் இந்தியா 520 ரன்களுக்கு முதல் இன்னிங்க்ஸை இழந்தது.
இந்தியா 241 ரன்களுடன் முன்னிலை பெற்றது. இதையடுத்து ஆடத் தொடங்கியது நியூசிலாந்து. ஆனால் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்களை இழந்து வெறும் 75 ரன்களுடன் பரிதாபமாக இருந்தது நியூசிலாந்து.
இந்த நிலையில் இன்று காலை மீண்டும் ஆட்டம் தொடங்கியதும், அடுத்தடுத்து தனது விக்கெட்களை இழந்தது நியூசிலாந்து.
நேற்று ஆட்டமிழக்காமல் இருந்த பிளைன், இன்று காலை 67 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.
மெக்கல்லம் மட்டுமே சற்று போராடிப் பார்த்தார் 135 பந்துகளைச் சந்தித்த அவர் 84 ரன்கள் சேர்த்தார். அதேபோல ஜெ.டி. ரெய்டர் 21 ரன்கள் சேர்த்தார். ஆனால் மற்ற வீரர்கள் குறிப்பிடத்தக்க அளவில் விளையாடவில்லை. இதனால் 279 ரன்களுக்கு ஆட்டமிழந்தது நியூசிலாந்து.
இதையடுத்து 39 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு இந்தியாவுக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து களம் இறங்கிய கம்பீரும், டிராவிடும் ஆட்டமிழக்காமல், 5.2 ஓவர்களில் இந்த இலக்கை எட்டி இந்தியாவுக்கு பெரிய வெற்றியைத் தேடித் தந்தனர்.
கம்பீர் 30 ரன்களும், டிராவிட் 8 ரன்களும் சேர்த்தனர்.
ஆட்ட நாயகனாக சச்சின் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த 10 விக்கெட் வெற்றியின் மூலம் இந்தியா டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது
Friday, March 13, 2009
Subscribe to:
Posts (Atom)
